Sunday, December 14, 2008

மனவருத்தம்

எதை எழுதுவது ??
எவ்வாறு எழுதுவது???
ஏன் எழுத வேண்டும் ????

எனக்குள் எழுந்த கேள்விகளுக்கான பதில் என்னிடம் இல்லை என்பது ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல. என்றாலும் அவ்வப்போது மனதில் எழுகின்ற ஒரு வித துடிப்பு என்னை துண்டுகிண்றது என்றால் அது சில வேளை உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் நான் எழுத நினைக்கவில்லை என்பது தான் உண்மை.

"அடே பிரணவா ஏதாவது படியுங்கோடா, ஏதுவா இருந்தாலும் எழுதுங்கோடா, ஏதாவது செய்தால் தான் இந்தத்துறையில வாழலாம். அது சரி இப்பவே ஒண்டும் செய்யேலாம இருக்கிறியல் கலியாணம் கட்டி என்ன செய்யப்போறியலோ தெரியல்லை" என்ற மதிப்புக்குரியவரின் வசனங்களை காது வாங்காமலும் இல்லை. அதே சமயம் காது வாங்கியவற்றை செயற்படுத்தும் பக்குவமும் இல்லை.

சில வேளை இந்த வசனங்கள் கூட என்னை எழுதுவதற்க்கு தூண்டியிருக்கலாம்.
எது எப்படியோ. யாரோ ஒருவரின் பேச்சில் அல்லாமல் எனக்கு பிடித்த ஒருவரின் அறிவுறுத்தலால் நான் எழுதுவதற்கு முடிவெடுத்தமையானது எதிர்பாராத திருப்பம் தான்.எல்லாரையும் போல பீலா விடுறான் என நினைத்தால் நான் பொறுப்பல்ல.(பிறகு கவலைப்படுவீங்க)

எதை எழுதலாம் என சிந்தித்த போது ஒன்றுமே இல்லையே என்ற தவிப்பே மிஞசியிருந்தது.காரணம் இல்லாமலும் இல்லை படிக்கிற காலத்தில் எதிலையும் பங்கு கொண்டுதும் (கட்டுரை,கதை ,சிறுகதை) இல்லை. அப்ப எப்பிடி முடியும் ?
வேறொன்றும் இல்லை பாடசாலைக் காலத்தை பெருமையுடன் வீனடித்ததால் ஒரு சிறிய மன வருத்தம். எனது வாழ்க்கையில் எனக்கு நடந்தவை அல்லது நான் சந்தித்தவை பற்றிய பதிவை இந்தத் தளத்தில் பதிய முயற்சிக்கிறேன்.