ஒவ்வெருவருடைய இழப்பும் ஏதோ ஒன்றை எமக்கெல்லாம் உணர்த்தி செல்வதென்னமோ உண்மைதான். ஒவ்வொரு நண்பர்களை இழக்கும் போதும் நாம் ஏதோ ஒன்றை புரிந்து கொள்கின்றோம்.ஒன்றை இழந்துதான் இன்னென்றை பெறமுடியுமென்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் மனித வாழ்க்கை இருக்கிறது என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது நண்பா.
எண்ணித் துணிந்து ஒவ்வொரு செயலிலும் இறங்குகின்ற வீரம்,
எந்த சந்தர்பத்திலும் எவருக்கும் உதவக்கூடிய மனம்,
தனது சேகங்களை மறைத்து சிரித்துப் பேசுகின்ற முகம்...
இப்படிச் செல்லச்செல்ல வார்த்தைகள் வருவதென்னவோ உண்மைதான். ஆனால் கண்களை கண்ணீர் மறைக்கின்றது. செல்லெனா துன்பங்களை செல்லியாற நண்பன் இல்லையென்ற வேதனை தான் மிஞசி நிற்கின்றது. விடிகின்ற ஒவ்வொரு பொழுதும் எனக்கு விடை கொடுக்க போகிறதோ என்ற அச்சத்தோடு வாழ்ந்த காலங்கள் மீண்டும் என் மனக்கண் முன்னே காட்சியாகும் போது உனது இழப்பு என்னை நிலைகுலைக்கிறது. வாழத்தெரியாதவர்கள் வளமாய் வாழ, வாழ்ந்து காட்டிய நீ வானமேறியது ஏன்?? விடை தெரியாத பல கேள்விகளுடன் வீணாய் அலைகின்றேன்..!
நாமேல்லாம் வாழும்போது தான் உறவுகளுக்காகா உழைத்துக் கொடுத்திருப்போம். நீ ஆடாமல் அசையாமல் படுத்திருக்க, உன்னை வைத்து பணம் பார்த்தது உன் சுற்றம். உனது அஸ்தி கடலோடு கரைந்திருக்காது லாப நட்ட கணக்கு பார்த்தான் நீ அண்ணா என்று கூப்பிடும் அந்த மனிதன். அவனை மனிதன் என்று கூப்பிட எனக்குப் பிடிக்கவில்லை ஆனால் சில வேளை நீ கோவிப்பாயோ என்பதால் மனிதன் என்கிறேன்.
நாங்கள் சந்தோசமாக சுற்றி திரிந்த காலங்களில் வடிவேலு பாணியில் "ஏலாது" என நீ சென்
னதன்
அர்த்தம் நீ இல்லாத போது விளங்குகிறது. "எத்தனை வகையான மனிதர் நம் முன்னால் திரிகின்றனர்" என அறிவதற்கு விலையாக உனதுயிரை கொடுத்தாயே..! வாழ்ந்த போதும் சரி, எம்மை விட்டு பிரிந்த போதும் சரி உன்னை நான் "தன்னை அழித்து ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தியாகவே பார்கின்றேன்"

No comments:
Post a Comment