Tuesday, April 21, 2009

அன்புள்ள நண்பா


ஒவ்வெருவருடைய இழப்பும் ஏதோ ஒன்றை எமக்கெல்லாம் உணர்த்தி செல்வதென்னமோ உண்மைதான். ஒவ்வொரு நண்பர்களை இழக்கும் போதும் நாம் ஏதோ ஒன்றை புரிந்து கொள்கின்றோம்.ஒன்றை இழந்துதான் இன்னென்றை பெறமுடியுமென்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் மனித வாழ்க்கை இருக்கிறது என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது நண்பா.

எண்ணித் துணிந்து ஒவ்வொரு செயலிலும் இறங்குகின்ற வீரம்,
எந்த சந்தர்பத்திலும் எவருக்கும் உதவக்கூடிய மனம்,
தனது சேகங்களை மறைத்து சிரித்துப் பேசுகின்ற முகம்...

இப்படிச் செல்லச்செல்ல வார்த்தைகள் வருவதென்னவோ உண்மைதான். ஆனால் கண்களை கண்ணீர் மறைக்கின்றது. செல்லெனா துன்பங்களை செல்லியாற நண்பன் இல்லையென்ற வேதனை தான் மிஞசி நிற்கின்றது. விடிகின்ற ஒவ்வொரு பொழுதும் எனக்கு விடை கொடுக்க போகிறதோ என்ற அச்சத்தோடு வாழ்ந்த காலங்கள் மீண்டும் என் மனக்கண் முன்னே காட்சியாகும் போது உனது இழப்பு என்னை நிலைகுலைக்கிறது. வாழத்தெரியாதவர்கள் வளமாய் வாழ, வாழ்ந்து காட்டிய நீ வானமேறியது ஏன்?? விடை தெரியாத பல கேள்விகளுடன் வீணாய் அலைகின்றேன்..!

நாமேல்லாம் வாழும்போது தான் உறவுகளுக்காகா உழைத்துக் கொடுத்திருப்போம். நீ ஆடாமல் அசையாமல் படுத்திருக்க, உன்னை வைத்து பணம் பார்த்தது உன் சுற்றம். உனது அஸ்தி கடலோடு கரைந்திருக்காது லாப நட்ட கணக்கு பார்த்தான் நீ அண்ணா என்று கூப்பிடும் அந்த மனிதன். அவனை மனிதன் என்று கூப்பிட எனக்குப் பிடிக்கவில்லை ஆனால் சில வேளை நீ கோவிப்பாயோ என்பதால் மனிதன் என்கிறேன்.

நாங்கள் சந்தோசமாக சுற்றி திரிந்த காலங்களில் வடிவேலு பாணியில் "ஏலாது" என நீ சென்னதன் அர்த்தம் நீ இல்லாத போது விளங்குகிறது. "எத்தனை வகையான மனிதர் நம் முன்னால் திரிகின்றனர்" என அறிவதற்கு விலையாக உனதுயிரை கொடுத்தாயே..! வாழ்ந்த போதும் சரி, எம்மை விட்டு பிரிந்த போதும் சரி உன்னை நான் "தன்னை அழித்து ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தியாகவே பார்கின்றேன்"


Saturday, January 17, 2009

கம்பன் வீட்டுக் கட்டுத் தறி (காட்டு தடி)


கத்தி இன்றி இரத்தம் இன்றி சத்தமின்றி நடந்த பகற்கொள்ளை.ஊர்பாசையில சொல்லப் போனால் கண்ணப்பொத்தி அடிச்சுப் போட்டான்.இன்று நாம் எல்லோரும் தன்த்தனியே மனதுக்குள் அழுவதற்கு காரணமான துரோகம் (ஊர்பாசையில கழுத்தறுத்திட்டான் அல்லது திண்ட சட்டிக்குள்ள மலம் (இவ்வளவு இனிமையா சொல்லது எங்கட சனம்) இருந்திட்டான்) நான் அறிந்த நண்பர்களையும் விட்டுவைக்கவில்லை.



ஓர் உண்மைச்சம்பவத்தின் நகலை இங்கே பதிகிறேன்.(இது அதுவா இருக்குமோ?? என்று உங்களுக்கு நீங்களே ஆருடம் கூறினால் நான் பெறுப்பல்ல.)

எனது வேலை முடிந்து வீடு வந்து பின் நகர்வலம்(பொருசா ஒண்டும் இல்லை ஊர் சுற்றுறது) செய்வது வழமை. எனது வாகனமான நடராசாவில் எனது நகர்வலத்தை மேற்கொண்ட போது நண்பர் சுந்தரம்(எரிவாயு- வீட்டு வாசல்,சமையல்அறை வரையான சேவை செய்பவர்) இடை மறித்து ஈசனை கண்டனீங்களே என்றார்.ஏதோ வழமையான பிரச் சினை போல என நினைத்தாலும் அறியவேண்டிய ஆவலினால் ஏன்? என கேட்டேன்.அப்ப விசயம் தெரியாது போல சுந்தரத்தின் முகத்தில் சந்தோச ரேகை ஓடி மறைந்தது.

நம்மளுக்கு பெரிசா ஆப்படிச்சாலும் ரிவேட் அடிச்ச பீலிங்ஸ்சோட ஏனப்பா என்ன விசயம் என மீண்டும் கேட்டேன்.இவன் ஈசன் சிந்தாமணியிண்ட காச சுட்டுக் கொண்டு ஓடிட்டான்.சும்மா இல்லை இருவது லச்சமாம். சிந்தாமணியிண்ட ஆக்கள் ஈசனை தேடிக்கொண்டு இருக்கிறாங்களாம்.கண்டா சொல்லுங்கோவன் எனக்கூறியபடி சுந்தரம் சைக்கிளை மிதித்தார். சைக்கிளை மிதித்த மிதியிலே நான் விளங்கிக் கொண்டேன் சுந்தரத்தின் வெற்றிக்கழிப்பை.(எங்கட குணமே மற்ற ஆக்கள பற்றி கதைத்து சந்தேசப்படுறது தானே) ஈசன் மீது நான் வைத்திருந்த கணிப்பு தப்பாகி விட்டதே என்ற வருத்தம் நம்பாதே நம்பாதே ஒருத்தரையும் நம்பாதே என மீண்டும் ஒரு முறை என்னை எச்சரித்தது.

செய்திக்கான முலம் கிடைத்துவிட்டது.விசயத்தை கண்டறிய வேண்டியது தான் மீதி என்பதால் எனது புலனாய்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினேன்.அதன் பலனாக இரண்டு பேரை விசாரித்து விசயத்தை விளங்கிக் கொண்டேன்.அந்த இருவரும் கூறிய கதையும் சுந்தரம் கூறிய கதையும் ஒன்றுதான். ஆகவே சுந்தரம் தனக்கு கிடைத்த செய்தியை திரிபுபடுத்தாமல் அப்படியே நம் நாட்டு ஊடகங்களைப்போல தந்தமையானது அவரது நாட்டுப்பற்றை பற்றி கட்டியம் கூறியது.


நடந்தது இதுதான்

சிந்தாமணியின் நண்பன் ஒருவன் தான் வெளிநாடு செல்வதற்காக தனது உறவினாகளிடம் காசு கேட்டிருக்கிறான்.அவனது வங்கி கணக்கிற்கே முதலில் காசு போடுவதாக இருந்தது.நண்பன் திடீரென யாழ்பாணம் சென்றதால் அவனது உறவினர்கள் சிந்தாமணியினுடைய கணக்கிற்கு காசை அனுப்பி இருக்கிறார்கள்.நண்பனின் வேண்டுகோலின் படி காசை எடுத்து ஏஜென்ஸியிடம் கொடுக்க வேண்டும்.இதற்காக சிந்தாமணி ஈசனையும் யுவனையும் பாதுகாப்பிற்காக அழைத்து சென்று காசை எடுத்துக் கொண்டு, பின் போத்தல் (மதுபானம்) வாங்குவதற்காக (கவனியுங்கள்) சுப்பர் மாக்கட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.

காவலாளியிடம் பணப்பையை கொடுக்க முடியாத என்றபடியால், ஈசனை வாசலில் நிறுத்திவிட்டு சிந்தாமணியும் யுவனும் உள்ளே சென்றனர். போத்தலும் கையுமாக வெளியே வந்தவர்களுக்கு அதிர்ச்சி.காரணம் ஈசனைக் காணவில்லை காசோடு நண்பனை கடத்தி விட்டார்களோ என பயந்த சிந்தாமணி தனது நண்பர்களுக்கு அறிவித்து விட்டு ஈசனுடைய தொலை பேசிக்கு அழைப்பை ஏற்படுத்த, அது தற்காலிகமாக பாவனையில் இல்லை எனச் சொல்லவும் சிந்தாமணிக்கு பொறி தட்டியது. (கடத்துபவர்கள் கடத்தியவுடன் தொலை பேசியை நிறுத்துவது இல்லை)அப்ப ஈசன் எங்களுக்கு கயித்த கொடுத்திட்டான்(ஆப்படிச்சிட்டான்) எனத் தெளிவான பிறகு தான் தேடத்தொடங்கி இருக்கிறார்கள்.(தாங்கள் இழந்த காசை ஈசனின் மாமா(இவருக்கும் தலைப்பிற்கும் தொடர்புண்டு) மற்றும் சகோதரர்களிடம் இருந்து பெற்று கொண்டதாக சம்பவம் நடந்து ஒரு கிழமையில் சுந்தரம் சொல்லியிருந்தார் )

மூன்று கிழமையின் பின் தேடல் ஓய்ந்த வேளை ஈசன் தனது மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான்.எந்த வித தயக்கமோ வெடகமோ இன்றி திரிந்த அவன் சுந்தரத்தை கண்டு உண்மையை சொல்லியிருக்கிறான்.

முதலிலே மூவரும் சேர்ந்து அடிக்கத்தான் திட்ம் பொட்டிருக்கினம்.ஏனே தெரியலை சிந்தாமணி மனம் மாறிட்டான்.ஒரு மாதிரியாக அவனை மீண்டும் மனம் மாற்றி சேர்த்துக் கொண்டுதான் போத்தல் வாங்க போயிருக்கிறார்கள் சென்று கொண்டிருக்கையில சிந்தாமணி மறுபடியும் மனம் மாறினாலும் என நினைத்த ஈசன், ஆட்டோ வைத்திருக்கும் தனது நண்பனை தொலை பேசி முலம் அழைத்து அவர்கள் இருவரும் சுப்பர் மாக்கட்டுக்குள் சென்றதும் ஆட்டோவில் ஏறி சென்று இருக்கிறான்.மூன்று கிழமை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஈசன் ஒரு சில லட்சங்களை இழந்த பின் தனது பிழையை உணர்ந்து திரும்பி வந்திருக்கிறான்.

தங்கள் மீதும் தவறு இருந்ததால் தான் அவர்கள் பொலீஸில் எந்த முறைப்பாட்டையும் செய்யவில்லை என்பது பிறகுதான் விளங்கியது.
ஈசனது கடந்த கால வாழ்க்கை,சமுகத்தில் மதிப்புள்ள உறவினர்கள் என எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்த போது, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என உள்மனம் சொல்லியது.



ஒருவனை கெட்டவனாக்குவதும் நல்லவனாக்குவதும் சந்தர்ப்பமாக கூட இருக்கலாம்.

Wednesday, January 14, 2009

வாழ்க்கை "போராட்டத்திற்கு" இனி வழியே இல்லை...!







வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.....என்ற பாடலின் வரிகளை வலு கச்சிதமாக எம்மினம் புரிந்து கொண்டுள்ளது.ஒரு புறம் கொடூர யுத்தம்.இதனால் அணு அணுவாக அல்லது அங்குல அங்குலமாக எம்மினம் அழிந்து கொண்டு இருக்கிறது. மறு புறத்தில் காட்டிக் கொடுப்புகள்,கைதுகள், காணமல் போதல் என பல விசயங்கள்.ஆனால் "எண்ணித் துணிக" என்ற வசனத்தை புது அர்த்தத்துடன் பார்க்கிறது எம்மினம்."என்ன வேணுமென்டாலும் பண்ணுங்கடா நாங்கள் வாழுவம்" என மார் தட்டி வீறு நடை போடுகிறது எம்மினம்.

வேறு ஒன்றுக்கும் இல்லை இந்த வீறு நடை. இன்றைய பொங்கலுக்கு பொருட்கள் வாங்கத்தான் நேற்று தினம் இந்தச்சனம் வீறு நடை போடுகிறது.இது வழமையானது தானே இவன் ஏன் புதுசா பீதிய கிளப்பிறான் என யோசிக்காதிஙக.ஒரு சில விசயங்கள் தான் என்னை எழுதத் தூண்டியது.


அதில் முதலாவது விலைக்கு விற்கப்பட்ட மா இலை (மா விலையால் புட்டும் பாணும் சாப்பிட முடியாமல் தவிக்கும் எம்மினத்தின் ஒரு பகுதி மா இலைக்கு விலை கொடுத்த சோகக்கதையை நான் எப்படிச் சொல்ல) பத்து ரூபா கொடுத்தால் ஏழு இலையாம்.(புழுக்குத்தல்,சருகு இலைகளை தவிர்த்து நல்ல இலைகளை தேர்ந்தெடுக்கலாம்) காலி வீதியில் நான் கண்ட முதல் காட்சியே சூடு பிடித்த மாவிலை வியாபாரம் தான்.(பேரம் பேசி பெருமையோடு வாங்கியோரும் உண்டு) மாவிலையை காசுக்கு வித்து எல்லோரையும் மாங்காய் மடையன் ஆக்கியிருக்கிறார்கள்


வாழையிலை
, கரும்பு, மர அகப்பை இப்படி ஏராளம். ஆனால் இதெல்லாத்தையும் விட பெரிய கொடுமை இரண்டாவது விசயம்.அது என்னன்னா இஞசி மஞசள் வித்துக்கொண்டிருந்த இடத்தடியில தாய்க்கும் மகளுக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல். மகள் தாயிடம் கேட்கிறா

















"அம்மா இத ஏன் வாங்க வேணும்??" தாய் பதில் சொல்ல முதல் இஞசி மஞசள் வித்துக்கொண்டிருந்த ருவான் "உங்கட சைவ ஐயா தான் சொன்னாரு.பானையில வச்சு கட்டினு அக்கனுமா." (அடி இஞசி வாங்கிற மங்கி இது கூடத்தெரியல்ல உனக்கு பொங்கல் ஒரு கேடா என, தலையில நாலு குட்டு குட்டி கேக்கணும் போல தான் இருந்திச்சு)எனச் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது (சும்மா மண்டைக்குள்ளால போச்சுது).



இப்படி
எங்களையும் எஙகள் சாத்திர சம்பிரதாயங்களையும் சுழிவு நெழிவுகளையும் நன்கு தெரிந்து கொண்டு, எங்களிடம் காசை வாங்கி எங்களையே அடிக்கும் வித்தையையும் தெரிந்த ருவான் போன்றவர்களுடைய சமிபத்திய சந்தோசம், கிளிநொச்சி கைப்பற்றியதற்கு நடு ரோட்டில் பொலிசாரோடு சேர்ந்து வெடி போட்டதுதான். (புது வருசத்துக்கு நாங்க வெடி கொழுத்தினா மக்களுக்கு இடைஞசல், இதையே சும்மா நாளில நீங்க செய்தா மக்களுடைய ஆதரவோ?).நாங்க எல்லாம் எங்கட எங்கட ஊருக்குப் போனால். சோத்துக்கு சிங்கி அடிக்கேக்கை தெரியும்.இதுவும் நடக்கும் என்று நீங்களும் நம்புறீங்களா???

எது எப்படியோ
"பொங்கலே பொங்கல்" என்கின்ற வார்த்தைகள்
"கோவிந்தா கோவிந்தா" என கேட்காமல் விட்டால் சரிதான்.


Sunday, January 4, 2009

வெடியோடு விளையாடி நண்பர்களோடு உறவாடி......

ஒவ்வொரு பண்டிகையும் ஏதோ ஒரு வகையில் எமக்கெல்லாம் முக்கியமான, மறக்க முடியாத அனுபவங்களை கொண்டுள்ளவை என்றால் மறுக்கவா முடியும். உண்மை தான் சுகமான அனுபவங்களை மறந்தாலோ, மறுத்தாலோ
நாம் மனிதரில்லை..!

பாட்டை கொப்பி அடிச்சிட்டான் எணடு முறைக்காதிங்க. உண்மையிலேயே எனது நண்பர்களோடு விடலைகளாய் சுற்றித்திரிந்த அந்தக்காலமும் வெய்யில் பாட்டும் ஒனறுதான்.

நான் நண்பர்களோடு சுற்ற தொடங்கியது 8ஆம் வகுப்பிற்கு பிறகுதான்.அப்போதேல்லாம் இரவில் வெளியே தங்க ஏலாது. அதாவது நம்ம பாசையில நைட் அடிக்கேலாது மச்சான்..11ஆம் ஆண்டில ஒரே ஜெக ஜோதிதான். ஒவ்வொரு நாளும் குறுப் ஸ்ரடீஸ் எண்டு நைட் அடிதான். அந்த நாட்களில சந்திக்க கூடாத பிரச்சினை(அது எல்லாம் ஒரு வரலாறு. அந்த வரலாறுகளை கூடிய சீக்கிரமே பதியுறன் அவசரப்படாதிங்க) எல்லாம் சந்திச்சு ஓ.எல் சேதினை எழுதி பாஸ் பண்ணுறது முடியிற காரியமா?? மனசாட்சியை தொட்டு சொல்லுஙகோ பாப்பம்.அப்பிடி இருந்தும் ஏதோ பாத்து கீத்து பாஸ் பண்ணிட்டம்..எங்களைப் பற்றி இப்ப விளங்குது தானே.

ஓ.எல. எழுதி ஊரை ரன் பண்ணின காலம்.2002ஆம் ஆண்ட வரவேற்க எல்லாரும் நைட் அடிக்கிறதுக்காக செட்டாகிட்டம்.சும்மா நைட் அடிச்சா ஜோகி இல்லை, (நல்லாயிராது) ஏதாவது செய்வம் எண்டு ஒருத்தன் சென்னவுடனே "தண்டம்" தாமதிக்காம காசு கலக்சன் போட்டான் 1000ம் ரூபாவும் இல்லை. "இதை வைச்சு என்னததை பண்ணுறது,சமுதாயம் நோண்டியா(கேவலமாக) பாக்கபோகுதடா தண்டம்" என்றான் தாத்தா.தாத்தாவின் பேச்சில் சூடான தண்டம் என்ன தண்ணியா அடிக்கப்போறம்? (அப்ப எல்லாம் தண்ணி அடிக்கிறதில்லை, இப்பவும் தான்) விசரா வெடிதானே போடப்போறம்.அதக்கேன் மூக்கால அழுகிறாய் என்றான்.
2 கட்டு பட்டாசும் 1 கட்டு வான வெடியுமா வந்து கொழுத்த தொடங்கிட்டம். அப்பதான் "அமத்துறு" வீட்ல இருந்து வர, "வெடி ராம்" ஆக்கள் ("வெடி ராம்" பட்டாசு எறியிறதில கெட்டிக்காரன் இல்லை, ஆனால் செம வெடியன், அண்ட புழுகு ஆகாச புழுகு எல்லாம இவனுட்டதான் பழக வேணும்.வெடிக்கிறதில அப்பிடி ஒரு தனித் திறமைசாலி ) வழி மறிச்சு வெடியால தாக்கிட்டாஙகள் என்ற செய்தி மெல்லக் கசிந்தது. சும்மாவே நாங்க எல்லாம் நரியாக்கள். இப்பிடி என்டால் சொல்லவா வேணும். அதுவும் ஆமத்துறு பெயருக்கேற்ற செயல் வீரன். ( எங்கட நாட்டு ஆமத்துறுகளை விட மோசம்) வெடி ராம்ட ஆக்களை வெடியால தாக்கி அவங்கட வெடியெல்லாத்தையும் கைபற்றுறது தான் எங்கட திட்டம். அதிலையும் கையால எல்லாம் அடிபடுறதில்லை எண்டு முடிவெடுத்து மூன்று ரீம பிரிஞசு போனம்(சைக்கிள் குறூப், நடையில 2 குறூப்) இதில புலனாய்வுக்கு 2 பேர் வேற. பிறகென் புலனாய்வுகாரர் சொன்ன இடத்திற்கு சென்று செம அடி. தப்பி ஓடுற ஆக்களை சைக்கிள் படை கலைச்சு கலைச்சு வான வெடியால தாக்க எஙகட திட்டம் சக்ஸஸ் ஆகிட்டுது. கைபற்றின வெடியளோட எங்கடை கோட்டைக்கு போய் வெடி போடத்துவங்கினம், சும்மா சொல்லக் கூடாது முளக்கம் எண்டா அப்பிடி முளக்கம்.

நாங்கள் முளங்கிக் கொண்டு இருக்க தப்பி ஓடின வெடிராம்ட ஆக்கள் றேயல் காறங்கள் கெஞ்சப்பேரோட வந்து வெடி வாங்கப்போன எங்கட ஆக்களுக்கு கை வைச்சுட்டாங்கள். யார் மேல கை வைக்கிறம் எண்டு தெரியாத நிறை வெறியில இருந்த அவங்களை நம்மட குறூப் சிங்கம், புலி, கரடி எல்லாம் ஒன்றாப் போய் கடிச்சு குதறிட்டாங்க. இரண்டாம் முறையும் எங்களுக்கு பாரிய வெற்றி, இரண்டாவது சண்டை முடிந்த ஒரு கிழமையில கம்பன் விழா கடைசி நாள் எண்டு நினைக்கிறன். றேயல் காறங்கள் கதைக்க வந்தாங்கள், சமதான பேச்சு தானே எணடு சந்தோசமா போனம் முதல்ல எல்லாம் ஒழுங்காத்தான் போய் கொண்டிருந்திச்சு முன்னாலயும் பின்னாலயும் இரண்டு ஓட்டோ வந்து நிண்ட பிறகு தான் விளங்கிச்சு எங்க ஏரியாவுக்குள்ள புகுந்திட்டாங்க எண்டு. முதலடி விழுந்தவுடனே நம்மட குறூப் சிங்கம், புலி, கரடி எல்லாம் எஸ்க்கேப் ஆகிட்டாங்க.விவரம் விளங்கின நானும் தண்டமும் மதில் எறிபாய்ஞசு கம்பன் விழா மண்டபத்துக்கிள்ள புகுந்திட்டம்.மற்ற ஆக்கள் எல்லாம் சொறி டொட் கொம் தான்.சும்மா இல்லை அகோர அடி.அதுக்கு பிறகு அடிவாங்கின ஆக்கள் எங்களோட கெஞசம் தூரம்.பிறகு நாங்கள் திருப்ப அடிச்சு, அவங்களோட சமாதானம் பேசி சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தம். அந்த சண்டைக்கு பிறகு நாங்கள் தான் ராசாக்கள்.பேற இடமேல்லாம் மதிப்பும் மரியாதையும்தான். கன காலத்துக்கு பிறகு தான் தெரியும் அது பயத்தால வந்த பணிவெண்டு.பின்னாட்களில இந்துக்கல்லுரிக்கான ஏக பிரதிநிதிகளாகவும் எங்கட குறூப் தான் இருந்திச்சு (2004 வரை) அது சரி இத்தனை பிரச்சினைக்கும் காரணமான வெடி ராம்மும் இந்துக்கல்லுரிதான்.

இந்த வெடிபிரச்சினைக்கு பிறகு வெடி போடக்கூடிய ஒவ்வொரு பண்டிகையையும் புது விதமாக வரவேற்கிறோம். வேறென்றும் இல்லை இலங்கையின் சண்டை போல எங்களுக்குள்ளே வெடியால் அடிபடுவேம். அந்தச்சண்டை வெடிமுடியும் வரைதான்..