கத்தி இன்றி இரத்தம் இன்றி சத்தமின்றி நடந்த பகற்கொள்ளை.ஊர்பாசையில சொல்லப் போனால் கண்ணப்பொத்தி அடிச்சுப் போட்டான்.இன்று நாம் எல்லோரும் தன்த்தனியே மனதுக்குள் அழுவதற்கு காரணமான துரோகம் (ஊர்பாசையில கழுத்தறுத்திட்டான் அல்லது திண்ட சட்டிக்குள்ள மலம் (இவ்வளவு இனிமையா சொல்லது எங்கட சனம்) இருந்திட்டான்) நான் அறிந்த நண்பர்களையும் விட்டுவைக்கவில்லை.
ஓர் உண்மைச்சம்பவத்தின் நகலை இங்கே பதிகிறேன்.(இது அதுவா இருக்குமோ?? என்று உங்களுக்கு நீங்களே ஆருடம் கூறினால் நான் பெறுப்பல்ல.)
எனது வேலை முடிந்து வீடு வந்து பின் நகர்வலம்(பொருசா ஒண்டும் இல்லை ஊர் சுற்றுறது) செய்வது வழமை. எனது வாகனமான நடராசாவில் எனது நகர்வலத்தை மேற்கொண்ட போது நண்பர் சுந்தரம்(எரிவாயு- வீட்டு வாசல்,சமையல்அறை வரையான சேவை செய்பவர்) இடை மறித்து ஈசனை கண்டனீங்களே என்றார்.ஏதோ வழமையான பிரச் சினை போல என நினைத்தாலும் அறியவேண்டிய ஆவலினால் ஏன்? என கேட்டேன்.அப்ப விசயம் தெரியாது போல சுந்தரத்தின் முகத்தில் சந்தோச ரேகை ஓடி மறைந்தது.
நம்மளுக்கு பெரிசா ஆப்படிச்சாலும் ரிவேட் அடிச்ச பீலிங்ஸ்சோட ஏனப்பா என்ன விசயம் என மீண்டும் கேட்டேன்.இவன் ஈசன் சிந்தாமணியிண்ட காச சுட்டுக் கொண்டு ஓடிட்டான்.சும்மா இல்லை இருவது லச்சமாம். சிந்தாமணியிண்ட ஆக்கள் ஈசனை தேடிக்கொண்டு இருக்கிறாங்களாம்.கண்டா சொல்லுங்கோவன் எனக்கூறியபடி சுந்தரம் சைக்கிளை மிதித்தார். சைக்கிளை மிதித்த மிதியிலே நான் விளங்கிக் கொண்டேன் சுந்தரத்தின் வெற்றிக்கழிப்பை.(எங்கட குணமே மற்ற ஆக்கள பற்றி கதைத்து சந்தேசப்படுறது தானே) ஈசன் மீது நான் வைத்திருந்த கணிப்பு தப்பாகி விட்டதே என்ற வருத்தம் நம்பாதே நம்பாதே ஒருத்தரையும் நம்பாதே என மீண்டும் ஒரு முறை என்னை எச்சரித்தது.
செய்திக்கான முலம் கிடைத்துவிட்டது.விசயத்தை கண்டறிய வேண்டியது தான் மீதி என்பதால் எனது புலனாய்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினேன்.அதன் பலனாக இரண்டு பேரை விசாரித்து விசயத்தை விளங்கிக் கொண்டேன்.அந்த இருவரும் கூறிய கதையும் சுந்தரம் கூறிய கதையும் ஒன்றுதான். ஆகவே சுந்தரம் தனக்கு கிடைத்த செய்தியை திரிபுபடுத்தாமல் அப்படியே நம் நாட்டு ஊடகங்களைப்போல தந்தமையானது அவரது நாட்டுப்பற்றை பற்றி கட்டியம் கூறியது.
நடந்தது இதுதான்
காவலாளியிடம் பணப்பையை கொடுக்க முடியாத என்றபடியால், ஈசனை வாசலில் நிறுத்திவிட்டு சிந்தாமணியும் யுவனும் உள்ளே சென்றனர். போத்தலும் கையுமாக வெளியே வந்தவர்களுக்கு அதிர்ச்சி.காரணம் ஈசனைக் காணவில்லை காசோடு நண்பனை கடத்தி விட்டார்களோ என பயந்த சிந்தாமணி தனது நண்பர்களுக்கு அறிவித்து விட்டு ஈசனுடைய தொலை பேசிக்கு அழைப்பை ஏற்படுத்த, அது தற்காலிகமாக பாவனையில் இல்லை எனச் சொல்லவும் சிந்தாமணிக்கு பொறி தட்டியது. (கடத்துபவர்கள் கடத்தியவுடன் தொலை பேசியை நிறுத்துவது இல்லை)அப்ப ஈசன் எங்களுக்கு கயித்த கொடுத்திட்டான்(ஆப்படிச்சிட்டா
மூன்று கிழமையின் பின் தேடல் ஓய்ந்த வேளை ஈசன் தனது மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான்.எந்த வித தயக்கமோ வெடகமோ இன்றி திரிந்த அவன் சுந்தரத்தை கண்டு உண்மையை சொல்லியிருக்கிறான்.
முதலிலே மூவரும் சேர்ந்து அடிக்கத்தான் திட்ம் பொட்டிருக்கினம்.ஏனே தெரியலை சிந்தாமணி மனம் மாறிட்டான்.ஒரு மாதிரியாக அவனை மீண்டும் மனம் மாற்றி சேர்த்துக் கொண்டுதான் போத்தல் வாங்க போயிருக்கிறார்கள் சென்று கொண்டிருக்கையில சிந்தாமணி மறுபடியும் மனம் மாறினாலும் என நினைத்த ஈசன், ஆட்டோ வைத்திருக்கும் தனது நண்பனை தொலை பேசி முலம் அழைத்து அவர்கள் இருவரும் சுப்பர் மாக்கட்டுக்குள் சென்றதும் ஆட்டோவில் ஏறி சென்று இருக்கிறான்.மூன்று கிழமை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஈசன் ஒரு சில லட்சங்களை இழந்த பின் தனது பிழையை உணர்ந்து திரும்பி வந்திருக்கிறான்.
தங்கள் மீதும் தவறு இருந்ததால் தான் அவர்கள் பொலீஸில் எந்த முறைப்பாட்டையும் செய்யவில்லை என்பது பிறகுதான் விளங்கியது.
ஈசனது கடந்த கால வாழ்க்கை,சமுகத்தில் மதிப்புள்ள உறவினர்கள் என எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்த போது, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என உள்மனம் சொல்லியது.
ஒருவனை கெட்டவனாக்குவதும் நல்லவனாக்குவதும் சந்தர்ப்பமாக கூட இருக்கலாம்.



