ஒவ்வொரு பண்டிகையும் ஏதோ ஒரு வகையில் எமக்கெல்லாம் முக்கியமான, மறக்க முடியாத அனுபவங்களை கொண்டுள்ளவை என்றால் மறுக்கவா முடியும். உண்மை தான் சுகமான அனுபவங்களை மறந்தாலோ, மறுத்தாலோ
நாம் மனிதரில்லை..!
பாட்டை கொப்பி அடிச்சிட்டான் எணடு முறைக்காதிங்க. உண்மையிலேயே எனது நண்பர்களோடு விடலைகளாய் சுற்றித்திரிந்த அந்தக்காலமும் வெய்யில் பாட்டும் ஒனறுதான்.
நான் நண்பர்களோடு சுற்ற தொடங்கியது 8ஆம் வகுப்பிற்கு பிறகுதான்.அப்போதேல்லாம் இரவில் வெளியே தங்க ஏலாது. அதாவது நம்ம பாசையில நைட் அடிக்கேலாது மச்சான்..11ஆம் ஆண்டில ஒரே ஜெக ஜோதிதான். ஒவ்வொரு நாளும் குறுப் ஸ்ரடீஸ் எண்டு நைட் அடிதான். அந்த நாட்களில சந்திக்க கூடாத பிரச்சினை(அது எல்லாம் ஒரு வரலாறு. அந்த வரலாறுகளை கூடிய சீக்கிரமே பதியுறன் அவசரப்படாதிங்க) எல்லாம் சந்திச்சு ஓ.எல் சேதினை எழுதி பாஸ் பண்ணுறது முடியிற காரியமா?? மனசாட்சியை தொட்டு சொல்லுஙகோ பாப்பம்.அப்பிடி இருந்தும் ஏதோ பாத்து கீத்து பாஸ் பண்ணிட்டம்..எங்களைப் பற்றி இப்ப விளங்குது தானே.
ஓ.எல. எழுதி ஊரை ரன் பண்ணின காலம்.2002ஆம் ஆண்ட வரவேற்க எல்லாரும் நைட் அடிக்கிறதுக்காக செட்டாகிட்டம்.சும்மா நைட் அடிச்சா ஜோகி இல்லை, (நல்லாயிராது) ஏதாவது செய்வம் எண்டு ஒருத்தன் சென்னவுடனே "தண்டம்" தாமதிக்காம காசு கலக்சன் போட்டான் 1000ம் ரூபாவும் இல்லை. "இதை வைச்சு என்னததை பண்ணுறது,சமுதாயம் நோண்டியா(கேவலமாக) பாக்கபோகுதடா தண்டம்" என்றான் தாத்தா.தாத்தாவின் பேச்சில் சூடான தண்டம் என்ன தண்ணியா அடிக்கப்போறம்? (அப்ப எல்லாம் தண்ணி அடிக்கிறதில்லை, இப்பவும் தான்) விசரா வெடிதானே போடப்போறம்.அதக்கேன் மூக்கால அழுகிறாய் என்றான்.
2 கட்டு பட்டாசும் 1 கட்டு வான வெடியுமா வந்து கொழுத்த தொடங்கிட்டம். அப்பதான் "அமத்துறு" வீட்ல இருந்து வர, "வெடி ராம்" ஆக்கள் ("வெடி ராம்" பட்டாசு எறியிறதில கெட்டிக்காரன் இல்லை, ஆனால் செம வெடியன், அண்ட புழுகு ஆகாச புழுகு எல்லாம இவனுட்டதான் பழக வேணும்.வெடிக்கிறதில அப்பிடி ஒரு தனித் திறமைசாலி ) வழி மறிச்சு வெடியால தாக்கிட்டாஙகள் என்ற செய்தி மெல்லக் கசிந்தது. சும்மாவே நாங்க எல்லாம் நரியாக்கள். இப்பிடி என்டால் சொல்லவா வேணும். அதுவும் ஆமத்துறு பெயருக்கேற்ற செயல் வீரன். ( எங்கட நாட்டு ஆமத்துறுகளை விட மோசம்) வெடி ராம்ட ஆக்களை வெடியால தாக்கி அவங்கட வெடியெல்லாத்தையும் கைபற்றுறது தான் எங்கட திட்டம். அதிலையும் கையால எல்லாம் அடிபடுறதில்லை எண்டு முடிவெடுத்து மூன்று ரீம பிரிஞசு போனம்(சைக்கிள் குறூப், நடையில 2 குறூப்) இதில புலனாய்வுக்கு 2 பேர் வேற. பிறகென் புலனாய்வுகாரர் சொன்ன இடத்திற்கு சென்று செம அடி. தப்பி ஓடுற ஆக்களை சைக்கிள் படை கலைச்சு கலைச்சு வான வெடியால தாக்க எஙகட திட்டம் சக்ஸஸ் ஆகிட்டுது. கைபற்றின வெடியளோட எங்கடை கோட்டைக்கு போய் வெடி போடத்துவங்கினம், சும்மா சொல்லக் கூடாது முளக்கம் எண்டா அப்பிடி முளக்கம்.
நாங்கள் முளங்கிக் கொண்டு இருக்க தப்பி ஓடின வெடிராம்ட ஆக்கள் றேயல் காறங்கள் கெஞ்சப்பேரோட வந்து வெடி வாங்கப்போன எங்கட ஆக்களுக்கு கை வைச்சுட்டாங்கள். யார் மேல கை வைக்கிறம் எண்டு தெரியாத நிறை வெறியில இருந்த அவங்களை நம்மட குறூப் சிங்கம், புலி, கரடி எல்லாம் ஒன்றாப் போய் கடிச்சு குதறிட்டாங்க. இரண்டாம் முறையும் எங்களுக்கு பாரிய வெற்றி, இரண்டாவது சண்டை முடிந்த ஒரு கிழமையில கம்பன் விழா கடைசி நாள் எண்டு நினைக்கிறன். றேயல் காறங்கள் கதைக்க வந்தாங்கள், சமதான பேச்சு தானே எணடு சந்தோசமா போனம் முதல்ல எல்லாம் ஒழுங்காத்தான் போய் கொண்டிருந்திச்சு முன்னாலயும் பின்னாலயும் இரண்டு ஓட்டோ வந்து நிண்ட பிறகு தான் விளங்கிச்சு எங்க ஏரியாவுக்குள்ள புகுந்திட்டாங்க எண்டு. முதலடி விழுந்தவுடனே நம்மட குறூப் சிங்கம், புலி, கரடி எல்லாம் எஸ்க்கேப் ஆகிட்டாங்க.விவரம் விளங்கின நானும் தண்டமும் மதில் எறிபாய்ஞசு கம்பன் விழா மண்டபத்துக்கிள்ள புகுந்திட்டம்.மற்ற ஆக்கள் எல்லாம் சொறி டொட் கொம் தான்.சும்மா இல்லை அகோர அடி.அதுக்கு பிறகு அடிவாங்கின ஆக்கள் எங்களோட கெஞசம் தூரம்.பிறகு நாங்கள் திருப்ப அடிச்சு, அவங்களோட சமாதானம் பேசி சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தம். அந்த சண்டைக்கு பிறகு நாங்கள் தான் ராசாக்கள்.பேற இடமேல்லாம் மதிப்பும் மரியாதையும்தான். கன காலத்துக்கு பிறகு தான் தெரியும் அது பயத்தால வந்த பணிவெண்டு.பின்னாட்களில இந்துக்கல்லுரிக்கான ஏக பிரதிநிதிகளாகவும் எங்கட குறூப் தான் இருந்திச்சு (2004 வரை) அது சரி இத்தனை பிரச்சினைக்கும் காரணமான வெடி ராம்மும் இந்துக்கல்லுரிதான்.
இந்த வெடிபிரச்சினைக்கு பிறகு வெடி போடக்கூடிய ஒவ்வொரு பண்டிகையையும் புது விதமாக வரவேற்கிறோம். வேறென்றும் இல்லை இலங்கையின் சண்டை போல எங்களுக்குள்ளே வெடியால் அடிபடுவேம். அந்தச்சண்டை வெடிமுடியும் வரைதான்..
No comments:
Post a Comment